Home » » கோச்சடையானைப் புறக்கணிப்பதா…தீபிகா மீது ரஜினிகாந்த் கோபம்…!

கோச்சடையானைப் புறக்கணிப்பதா…தீபிகா மீது ரஜினிகாந்த் கோபம்…!

Written By Unknown on Friday 6 June 2014 | 15:58

இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான படம் என்ற பெருமையான விளம்பரத்துடன் வெளிவந்த படம் 'கோச்சடையான்'. ஆனால், படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு மோசமான கேப்சிரிங் தொழில்நுட்பத்துடன் வந்த படம் என்ற பெயரையே பெற முடிந்தது. படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வாரம் ஆகி விட்ட நிலையில் 90 சதவீத திரையரங்குகளில் படத்தை தூக்கி விட்டார்களாம். சில ஊர்களில் வெளியான ஒரு சில நாட்களிலேயே படத்தை எடுத்து விட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் குழந்தைகள் சேனலில் வரும் அனிமேஷனை விட இந்த படத்தின் அனிமேஷன் மோசமாக அமைந்ததே படத்திற்கு வரவேற்பு இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். அதோடு படத்தின் பிரமோஷனுக்கு படத்தின் நாயகியான தீபிகா படுகோனே உட்பட பலரும் வரவேயில்லை. படத்தைப் பார்த்ததும் தீபிகா, நொந்து போய்விட்டாராம். தன்னை இந்த அளவிற்கு அலங்கோலமாக காட்டுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை என அவர் புலம்பித் தள்ளிவிட்டார் என்கிறார்கள். அதனால்தான் அவர் படத்தின் எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லையாம். இந்த விஷயத்தில் தீபிகா மீது ரஜினிகாந்த் கோபமாக உள்ளார் என்கிறார்கள்.

ரஜினிகாந்தே படத்தின் வெளியீட்டிற்கு முன் 'ட்விட்டர்' கணக்கையெல்லாம் ஆரம்பித்து பரபரப்பூட்டியவர், அதன் பின் ஒன்றுமே செய்யவில்லையே என்றும் சிலர் சொல்கிறார்கள். மே 5ம் தேதி ட்விட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த் இதுவரை போட்ட ட்விட்டரில் இரண்டு இரண்டுதான் 'கோச்சடையான்' சம்பந்தப்பட்டது. அதிலும் அவையிரண்டுமே வெறும் வாழ்த்துச் செய்திதான். அவரே படத்தைப் பற்றி பிரமாதமாகப் பேசாத நிலையில் தீபிகாவை மட்டும் குறை சொல்வது நியாயம் இல்லை என்கிறார்கள் சிலர்.

இப்படி ஒரு மோஷன் கேப்சரிங் படத்தைக் கொடுத்து இந்திய திரைக்கலைஞர்களின் திறமையை கேவலப்படுத்தியிருக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனமே படத்திற்குக் கிடைத்துள்ளது. 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்ற பழைய பழமொழியையும் 'கோச்சடையான்' படத்தைப் பற்றி ஞாபகப்படுத்துகிறார்கள்.

Rajini upset over Deepika Padukone Show online , Rajini upset over Deepika Padukone tamil show online , Rajini upset over Deepika Padukone show download , Watch Rajini upset over Deepika Padukone online streaming , Watch Rajini upset over Deepika Padukone sun tv show online , Rajini upset over Deepika Padukone show today online , Rajini upset over Deepika Padukone today online ,Rajini upset over Deepika Padukone show live ,Rajini upset over Deepika Padukone show title song video online ,Watch Rajini upset over Deepika Padukone Show online , Rajini upset over Deepika Padukone08.06.2014 Show ,Rajini upset over Deepika Padukone Schedule List , 08.06.2014Rajini upset over Deepika Padukone08.06.2014

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive