ஜில்லா படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்பு இன்றி இருந்த நடிகை காஜல் அகர்வால், இப்போது ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கருணாகரனிடம் உதவியாளராக இருந்த சந்திர மோகன் என்பவர் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஜீவா ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ஜீவாவின் அப்பாவான ஆர்.பி.செளத்ரியே தனது சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்புத்தாண்டு அன்று இப்படத்தின் பூஜை நடக்கிறது. இதில் ஜீவா, காஜல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தற்போது ஜீவா, யான் படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்த பின்னர் இந்த புதியபடத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்தப்படியாக சமுத்திரகனி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜீவா. முதன்முறையாக ஜீவா-காஜல் அகர்வால் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Home »
Cinema News
» ஜீவாவுக்கு ஜோடியான காஜல் அகர்வால்…!!
0 comments:
Post a Comment