சிலர் ஓரளவு குண்டாக இருந்தால்தான் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். தல அஜீத்கூட நானும் விஜய்யாட்டம் ஸ்லிம்மாகப்போகிறேன் என்று சொல்லி திருப்பதி படத்தில் ஸ்லிம் பாயாக மாறி நடித்தார். ஆனால், அவரது அழகு காணாமல் போயிருந்தது.
அஜீத் அபிமானிகளே என்ன இது தல இப்படியாகி விட்டார் என்று பீல் பண்ணினார்கள். விளைவு, அதற்கடுத்த படத்திலேயே தனது உடல் எடையை அதிகப்படுத்தி மீண்டும் பழைய அஜீத்தாக மாறினார் அவர்.
இந்நிலையில், ஒன்பதுல குரு படத்திற்கு பிறகு காணாமல் போன லட்சுமிராய் தற்போது அதர்வாவுடன் நடித்து வரும் இரும்புக்குதிரை படத்துக்காக படு ஸ்லிம்மாகியிருக்கிறார்.
தனது ஆஜானபாகு உடலமைப்பே முதிர்ச்சியை காட்டுவதால், இப்படி உடம்பை குறைத்திருக்கும் லட்சுமிராயை பார்ப்பவர்களுக்கு அடையாளமே தெரியவில்லை. யாரோ புதுமுக நடிகை என்பது போல்தான் நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் இப்படி சொன்னாலும், லட்சுமிராயின் தளதள உடம்பில் பளிச்சிட்ட கலக்கல் கவர்ச்சி இப்போது சுத்தமாக காணாமல் போயிருக்கிறது. இதுபற்றி அவரிடம் கேட்டால், நேரில் பார்க்க அப்படித்தான் தெரியும்.
ஸ்கிரீனில் முன்பை விட இன்னும் அழகாக தெரிவேன். வேண்டுமானால் இந்த படம் திரைக்கு வரும்போது பாருங்கள் என்று சொடக் போட்டு சொல்கிறார் லட்சுமிராய்.
0 comments:
Post a Comment