Home » » அஜீத்தும், அஜீத்தும் மோதிக்கொள்ளும் காட்சியை படமாக்க அதிநவீன கேமரா!

அஜீத்தும், அஜீத்தும் மோதிக்கொள்ளும் காட்சியை படமாக்க அதிநவீன கேமரா!

Written By Unknown on Friday, 11 April 2014 | 23:56


தமிழ்ப்படங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக ஹாலிவுட் டெக்னீஷியன்களை இறக்குமதி செய்து வருகிறார்கள் கோலிவுட் டைரக்டர்கள். அந்த வரிசையில், சிம்புவைக்கொண்டு தான் இயக்கி வரும் சட்டென்று மாறுது வானிலை படத்துக்கு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த டேன் மேகர்தர் என்ற ஒளிப்பதிவாளரை கொண்டு வந்தார் கெளதம்மேனன். அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இப்போது அஜீத்தை அவர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதால், அந்த படத்துக்கும் டேன் மேகர்தரையே கேமராமேனாக்கியிருக்கிறார் கெளதம். மேலும், இப்படத்தில் அஜீத் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடிப்பதால், அதை வித்தியாசமான லென்ஸ் பயன்படுத்தி அவரது தோற்றத்தை மாறுபட்ட வடிவில் காண்பிக்கப்போகிறார்களாம். அதிலும், இரண்டு அஜீத்களும் மோதிக்கொள்ளும் காட்சியை பல கேமராக்களை வைத்து, இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத வகையில், புதுமையான முறையில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். அந்த காட்சிக்காக ஹாலிவுட்டில் இருந்து ஒரு அதிநவீன கேமராவையும் கொண்டு வருகிறார்களாம். அந்த கேமரா தண்ணீருக்கு அடியில் நடப்பதைகூட வெளியில் இருந்தபடியே பக்காவாக ஜூம் பண்ணி காட்டு ஆற்றல் மிக்கதாம்.

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive