பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. தபாங் படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் ஓஹோவென உயர்ந்தார், அதன் பிறகு ரவுடி ரத்தோர், ஜோக்கர், சன் ஆப் சர்தார், ஓ மை காட், தபாங் 2, ஹிம்மத்வாலா, புல்லட் ராஜா. ரா. ராஜ்குமார் படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் ஹிட்.
சோனாக்ஷியின் பேஸ் புக்கிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். சோனாக்ஷி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு பேஸ்புக் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது.
இந்தி ரசிகர்களை மட்டுமே கொண்டிருந்த சோனாக்ஷி, ரஜினியுடன் நடிப்பதால் தென்னிந்திய ரசிகர்கள் அவரை பேஸ்புக்கில் ஆர்வமாக தேடியதால் அவரது பேஸ்புக் பொது பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டிவிட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனாக்ஷி.
0 comments:
Post a Comment