Home » » அமிதாப்பச்சனை வியக்க வைத்த தனுஷ்!

அமிதாப்பச்சனை வியக்க வைத்த தனுஷ்!

Written By Unknown on Saturday, 17 May 2014 | 23:30

தனது உருவத்திற்கு பொருந்தாத வேடமாக இருந்தாலும்கூட அதற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி மேட்ச் பண்ணி விடுவார் தனுஷ்.
அதனால் அவரால் இந்த ஒல்லிக்குச்சி உடம்பை வைத்துக்கொண்டு சுள்ளான் மாதிரியான படங்களில் சூடு காட்டி நடிக்க முடிந்தது. பத்து பேர் பதினைந்து பேரையும் எளிதாக பந்தாடினார்.
அப்படிப்பட்ட தனுசுக்கு சமீபகாலமாக ஆக்சன் கதைகளில் நடிப்பதை விட பர்பாமென்ஸ் கதைகளின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதனால் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று மெனக்கெடத் தொடங்கியிருக்கிறார்.
அதன்காரணமாக, தற்போது தமிழில் அனேகன் படத்தில் பலதரப்பட்ட மாறுபட்ட வேடங்களில் நடிப்பவர், வேலையில்லா பட்டதாரிக்காக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடிததுள்ளார்.
இந்த படங்களைத் தொடர்ந்து இந்தியில் ராஞ்சனாவைத் தொடர்ந்து, பால்கி இயக்கத்தில், நடிக்கும் படத்தில் கண் பார்வை இல்லாதவராக நடிக்கிறார்.
இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்திருக்கிறார்கள் என்றாலும், தான் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் பல நாட்களாக ரிகர்சல் எடுத்து நடிக்கிறாராம் தனுஷ்.
ஒவ்வொரு காட்சியிலும் அவரது மெனக்கெடலைப் பார்த்து அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அமிதாப்பச்சனே தனுஷை வியப்புடன் பார்க்கிறாராம்.

0 comments:

Post a Comment

Disclaimer

ads

Powered by Blogger.

Blog Archive