மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் வெற்றிகரமாக ஓடியது. ரூ.4 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. மோகன்லால், மீனா திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமாக கருதப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய படம் டைட்டானிக் ஆகும். அந்த சாதனையை ‘திரிஷ்யம்’ முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது. தமிழ் ரீமேக்கில் மோகன்லால் கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்கிறார். தற்போது ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது.
பிரபலமான சிறந்த படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ‘கிரைம் நம்பர் 89’, ‘நார்த் 24 காதம்’ போன்ற படங்களும் சிறந்த படத்துக்கான கேரள அரசு விருதை பெற்றுள்ளன. சிறந்த நடிகருக்கான விருது பகத்பாலில், லால் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை ஆன் அகஸ்டின் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment