நடிகை ரம்யா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது தந்தையின் பெயரை ஆர்.டி.நாராயணன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நான்தான் ரம்யாவின் உண்மையான அப்பா என்று கூறி சி.வெங்கடேஷ் பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மாண்டியா தொகுதியில் போட்டியிடும் ரம்யா தன்னுடைய தந்தை ஆர்.டி.நாராயணன் என்றும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மறைந்த ஆர்.டி.நாராயணன் ரம்யாவை தத்தெடுத்து வளர்த்தவர் மட்டுமே. ரம்யாவின் உண்மையான தந்தை நான்தான். அதை மறைத்து தவறான தகவலை வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்னை தந்தையாக ஏற்க மறுத்தால் உண்மையான தந்தை யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதுகுறித்து ரம்யா கூறும்போது. "வெங்கடேஷ் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் சதி" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment