நடிகை அமலாபாலும், இயக்குனர் விஜய்யும் காதலிக்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இதுவரை மறுத்து வந்தவர்கள் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அமலாபாலின் அம்மா இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான் இருவரும் மறைத்து வந்தார்கள். வெளிப்படையாக சொல்ல இத்தனை நாள் ஆனது என்ற செய்தியும் அடிபடுகிறது. இதனை அமலாபாலின் அம்மா அன்னீஸ் பால் மறுத்திருக்கிறார்.
மகளின் காதல் பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவள் விஜய்யை காதலிப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதுபற்றி பேசுவதற்கு முன்பே அவள் எங்களை சமாதானம் செய்து ஓகே வாங்கிவிட்டாள். எங்கள் குடும்பமே காதலுக்கு எதிரி கிடையாது. ஆனால் அமலா சின்ன பொண்ணாக இருக்கிறாளே என்றுதான் யோசித்தோம். ஆனால் அவளின் காதலின் உறுதியை பார்த்து எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அவள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்து கொடுக்க வேண்டுமே என்று பயந்தோம். அவர்கள் இருவருமே படங்கள் அனைத்தும் முடிந்த பிறகுதான் திருமணம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். திருமண நிச்சயதார்த்தம் கேரளாவிலும், திருமணம் சென்னையிலும் நடக்கும்.
இவ்வாறு அமலாபாலின் அம்மா அன்னீஸ் பால் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment