கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களையடுத்து ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
‘விஸ்வரூபம் 2′ படம் வேகமாக வளர்ந்த நிலையில், இப்போது அப்படியே நிற்கிறது. இதனிடையே கமல் நடித்து வரும் மற்றொரு படமான ‘உத்தம வில்லன்’ படத்தை அவர் எடுத்து முடித்தாலும் திட்டமிட்டபடி வெளிவர சிக்கல் உருவாகியுள்ளது.
‘விஸ்வரூபம்’ படத்தை கமல்ஹாசன் திரையிட்ட போது அவருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது.
அட்வான்ஸ் கொடுத்தவர்களை விட்டுவிட்டு வேறு சிலருக்கு அவர் படத்தை திரையிட அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இப்போதே பிரச்சனைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
‘உத்தம வில்லன்’ படத்தைத் தயாரித்து வரும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படமான ‘மஞ்சப்பை’ படத்திலிருந்தே அவர்கள் பிரச்சனையை ஆரம்பிக்க உள்ளார்களாம். அப்போதுதான் ‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும் என முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
அதனால், தற்போது ‘மஞ்சப்பை’ படத்துக்கு சில நெருக்கடிகளைக் கொடுப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ‘மஞ்சப்பை’ பட விவகாரத்தில் முதல் தயாரிப்பாளரான சற்குணத்திற்கும், வாங்கி வெளியிடும் லிங்குசாமிக்கும் பிரச்னை எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேன்மேலும் பிரச்சனைகள் உருவாகும் எனத் தெரிகிறது. அதோடு, லிங்குசாமி இயக்கியுள்ள ‘அஞ்சான்’ படத்திற்கும் நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.



0 comments:
Post a Comment