அம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மா மகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ''நேற்று இன்று'' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருக்கிறார். விமல், பிரசன்னா, ரிச்சர்ட், அருந்ததி, நந்தகி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் முடிந்து காப்பி ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போய் இருக்கிறது. இதற்கு காரணம் ஹீரோயின் அருந்ததிதான்.
படத்தில் அவர் 5 அதிரடிப்படை வீரர்களுடன் காட்டுக்குள் செல்லும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அப்படியென்றால் காட்சிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதனால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை. இப்போது பத்மா மகனின் நண்பர் எஸ்.தணிகவேல் என்பவர் படத்தை வாங்கி வெளியிடுகிறார். அடுத்த மாதம் ரிலீசாகிறது.
இதுபற்றி பத்மாமகன் கூறியதாவது: "இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே இதற்கு ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். காரணம் படத்தில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. கண்ணை உறுத்தாத கிளாமர் இருக்கிறது. ஆனால் ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாலேயே படத்தை ஷகிலா படம் ரேன்ஞ்சுக்குத்தான் பார்க்கிறார்கள். படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்று யாரும் வாங்க முன்வரவில்லை. ஒரு சில கார்பரேட் கம்பெனிகள் அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை கேட்கிறார்கள். இதனால்தான் படம் தாமதமானது. இப்போது நண்பரின் உதவியால் படத்தை ரிலீஸ் செய்கிறேன்" என்கிறார் பத்மா மகன்.
Netru Indru movie delay due to Arundathi Show online , Netru Indru movie delay due to Arundathi tamil show online , Netru Indru movie delay due to Arundathi show download , Watch Netru Indru movie delay due to Arundathi online streaming , Watch Netru Indru movie delay due to Arundathi vijay tv show online , Netru Indru movie delay due to Arundathi show today online , Netru Indru movie delay due to Arundathi today online ,Netru Indru movie delay due to Arundathi show live ,Netru Indru movie delay due to Arundathi show title song video online ,Watch Netru Indru movie delay due to Arundathi Show online , Netru Indru movie delay due to Arundathi20.05.2014 Show ,Netru Indru movie delay due to Arundathi Schedule List , 20.05.2014Netru Indru movie delay due to Arundathi20.05.2014



0 comments:
Post a Comment